மகாப்பாரதம் கற்பனை ஓதலுக்கு மூலகதை அசோகரின் வாழ்க்கை!


பூதம் சிவன்விசுணு பிரம்மாஎன பொய்யாய்;

ஓதும் இன்ன பிறகாணல் நீர்கடவுள் என்று;

ஏது ஆகினும் மெய்(வரலாறு) அல்ல; ஆரிய...

சூது விடுக; பாதாம் பருப்பு அன்ன சாதகம்...

யாது உண்டோ? தேசம், அரசியல் நாகரிகம்;

பாதுகாப்பார் யார்? மகா பாரதம் விலகிபார்!



 கெளரவம் என்பதன் உயர்பதம் ஒழுக்கம்; ஒழுக்கத்தின் உயிர்பதம் நாகரிகம்;  சமூக கவுரவம், உத்யோக (பதவி) கவுரவம், சுயகவுரவம் போன்றவற்றிக்கு அடிப்படை மனித நாகரிகம்; அந்தப்படிக்கு நாகரிக பண்பாடுடையவர்கள் நடைமுறயில்  கெளரவர்கள். 

கதை மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள்  பார்பனசாதி ஓதல்கள்படி  சத்ரியர்கள்; துரியோதனனும் அவன் சகோதரர்களும்  கெளரவர்கள்.

இளவரசன  துரியோதனன் தன்னுடைய  தகப்னை போலவோ  ஓதுவோர் வாசுதேவ கிருட்டிணனை போலவோ இல்லாமல்  வாழ்நாள் முலுவதும்  இல்வாழ்ககையில் கலிங்க  இளவரசி பானுமதியை மட்டுமே மனைவியாக  கொண்டுச்  சிறப்புற்றவன். கர்ணனுக்கு சமூக கெளரவத்தை அளித்து அந்தபடிக்கு சமத்துவத்தை கொள்கையாக கொண்டுக் கடமை ஆற்றியவன்.

அவ்வாறு கெளரவமாக  வாழ்ந்த துரியோதனன் மகாபாரத்தில் பாஞ்சாலி  சேலையை பொதுச்சபை யில் அவிழ்க்கின்ற அநாகரிகத்தை அவன்  முற்போக்குச் சிந்தனை யுடைய  இளவரசனாகவும் இருக்கையில் எவ்வகையிலும்  கெளரவம்  அற்ற (மனித பண்பாடற்ற) அச்செயலை செய்திருபபான் என்பதை முறையே ஆய்வுச் செய்கையில் அறிவுடையோர் (தேச ஒற்ற்றுமையயில் அக்கறை உடையோர்) சற்றும் நம்பக்கூடியதாக இல்லை.

தவிர நெருப்புள் இருந்து பாஞ்ச்சாலி  தோன்றியதாக  நம்பும் ஊழல்பரப்புரை உண்மை நிகழ்வல்ல.   அதனால்  பாண்டவர்களுக்கு (அய்வற்கு) பாஞ்ச்சாலி மனைவி என்பது, தெரிந்தே பெண்மையை  இழிவுப்படுத்துகிற ஆணாதிக்க கற்பனை.

 

அந்தபடி கற்பனை  செய்யப்பட்ட பெண்ணை மானபங்கமுற சேலையை (வஷ்திரத்தை) களைய துரியோதனன் தன்தம்பி  துச்சாதனனை ஏவினான் என்பது  பொய்.

 

கடவுளாக நம்பப்படும் கணபதி கற்பனை என்றாலும் கணேசனுக்கு அன்னை பார்வதி என்பதாக கதை உள்ளது;  ஆனால் கற்பனையாகவும மகாபாரதம் பாஞ்சாலிக்கு தாயாக போற்றப்பட ஒரு மானுட  பெண்ணோ கடவுள் படைப்போ ஓதுவோர் உளருகிற கதைப்படி இல்லை.

நடந்துற்றதாக ஓதபடும் வந்தேரிகளின் சாதிஊழல் பேத மகாபாரத போர் கதைபடைப்புக்கு ஏதுவாக காரண அச்சாணியாக தோற்றுவிக்க உருவாகின  கற்பனைநெய்வே மேற்படி பாஞ்ச்சாலி அவமான நாடகம்.

 நிசம் நிழல்களாகலாம்; நிழல்கள் ஒருப்போதும் நிசம் என்று ஆகமுடியாது இந்நாள் சங்கிகள் திருவள்ளுவருக்குக் காவிஉடையை அணிவித்தார்கள்; அந்நாள் மங்கிகள் திருக்குறளில் கடவுள் வாழ்த்து அதிக்காரத்தை மோசடியாக திணித்தவர்கள். அந்தபடிக்கு பேரரசர் சாம்ராட் அசோகரின் வரலாற்றை மகாபாரதம் கதையாக கள்ளத்தனமாக கற்பனை செய்திருக்கி றார்கள்.

இந்தியாவில் தோன்றி நாடெங்கிலும் முழு நிலவாகிய பௌத்தத்தை மறைவுற செய்திடும் முன்னேற்பாடாகவும்... அதற்காக பேரரசர் சாம்ராட் அசோகரின் வரலாற்றை (புகழ்-வாழ்கையை) பவுத்தர்களின் (திராவிட மக்கள்) நினைவில் இருந்து அறவே மறந்திடுமாறு செய்திட

அந்தப்படிக்கு இந்தியாவை இந்து என்ற பெயரில் ஆரியர்களின் அடிமை நாடாக்க... பேரரசர் அசோகரின் வாழ்க்கை சரித்திரம்  அவர் மறைவிற்குப் பிறகு,  மகாபாரதம் கதையாக ஆபாசம் கலந்து  கற்பனை செய்யப்பட்டது.

வரலாற்றில் அசோகர்  காலத்தில் மக்கள் னைவரும் சமம் என்பது டைப் பிடிக்கப்பட்டது. உயர்ந்தவன் தாழ்ந்தவன் பிறப்பால் இல்லை  என்பது ஆட்சியின்கொள்கையாகவும் அதுவே தர்மமாகவும் (விதியாகவும்) இருந்துற்றது

 மகத பேரரசை இந்து சாம்ராசியமாக மாற்ற சாணக்கிய சாதி-ஆரியனால் கடுமையாக முயற்சி மேற்கொள்ளபட்டது;  சாணக்கியனுடைய அக்கோட்பாட்டின் உச்சகட்டமே..  கதை மகாபாரதம் அரங்கேற்ற்ம்.  இது மாமன்னர் அசோகரது மறைவுக்குப்பின் பார்பன அரசு குப்தர்கள்  ஆட்சி காலத்தில் நிகழ்துற்றது.

பேதம் ஏதுமற்ற நாடு என, மெளரிய பேரரசு தன்னுடைய காலத்திற்கு பிறகும் அமைதியுற வேண்டும் என்பது சாம்ராட் அசோகரின் எதிர்பார்ப்பு.

"பேதம் ஏதுமற்ற நாடு என அஸ்தினாபுரம் ஆகவேண்டும்"  பாரத கதையில் இது இளவரசன் துரியோதனனின் விருப்பம். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த  வேண்டும். இது கர்ணனின் குறிக்கோள்.

மகாப்பாரதம் கற்பனைக்கட்கு அசோகரின் வாழ்க்கை சரித்திரமே மூலகதை. அதனால் கற்பனை (மகாபாரதம்) மூலமாக, [ஒருவன்] துரியேதனன், [மற்றொருவன்] கர்ணன் எனும்படிக்கு; அசோகனின் புகழும்  சரித்திரமும் இருவேறு மானுட கற்பனை உடற்   கூறுகளாக சிதைக்கப்பட்டிருக்கிறது

 மகாபாரத்தில் கிருஷ்ணனால், தானே பிரம்மா, சிவன் உட்பட எல்லோருமாகவும் மற்றும் இயற்கை செயற்கை யாவிலும் எல்லாமாகவும் இயங்குவதாகவும் அறிவிப்பு உள்ளது. அந்தபடிக்கு சரித்திரத்தில் பிந்துசாரன் மகாபாரதத்தில்  சூரியன், பாண்டு, பாண்டுவின்  அண்ணன் (திருஸ்டிராஸ்டிரன்) என்று மூன்று பாத்திரங்களில் டைக்கப்படுகிறான்.

பிந்துசாரருக்கு மூத்த மனைவி மூலமாக  மொத்தம் 4 பிள்ளைகள். அவர்களில் அசோகர் இரண்டாவது பிள்ளை. முதல் பிள்ளையின் பெயர் சுஷிமா.  வரலாற்ற்றில் மெளரிய அரசன் பிந்துசாரன்; மகாபாரதத்தில பாணடுஆகினான். பிந்து என்பதானது கதையில்  பாண்டு  என்று பெயர்மாற்றம்  செய்யபட்டது.

மகாபாரதத்தில் பாணடுவின் மனைவி குந்திதேவி மூத்த மகன்  யுதிஷ்டிரன்  என்றபெயருடையவன் அவன் பாண்டு புத்திரர்கள் ஐந்து பேரின் கதைப் படைப்பாகின்றான் அதாவது ஐவரும் ஒருவரே. அந்த அய்வரில் மூத்தவன் (யுதிஷ்டிரன்) தர்மர் என்று சித்தரிக்கப்படுகிறான்

 கதையில்,  பாணடுவின் மனைவி குந்திதேவி மைந்தர்கள் பாண்ட்வர் (சத்ரியர்கள்) ஆகிறார்கள்.  திருஸ்டிராஸ்டிரன் மகன்கள் (இளவரசன் துரியோதன்னும் அவனுடைய ச்கோதரர்களும்) கெளரவர்கள். சூரிய(ன்)  புதல்வன் கர்ணன் தீண்டதகாதவன் (சூத்திரன்) எனறு ஆகினான்.

 சரித்திரத்தில் அரசர் பிந்துசாரனின்  இரண்டாவது  மகன் அசோகர்;  கதை பாரதத்தில்  திருஸ்டிராஸ்டிரனின் முதலாவது  மகன் துரியோதனன் என்று ஆகினான். அதாவது  வரலாற்றில் அசோகர்;  மகாபாரத கற்பனையில் துரியோதனன்.

 வரலாற்ற்றில் அரசன் பிந்துசாரனுக்கு மொத்தம் 12 மனைவியர் இருந்துற்றனர். மகா பாரதத்தில் திருஸ்டிராசனாக கதைப்படுத்தப்பட்ட படைப்பில் (2)னைவிகள்.   சரித்திரத்தில் அசோகருடைய  சகோதரர்கள் மொத்தம் நூறுப்பேர்;  இது வ்ரலாறு.    மகாபாரதத்தில்  துரியோதனுடன் உடன்பிறந்தவர்கள் (சகோதரர்கள்) நூறுப்பேர் + சகோதரி (1); இது கதை. 

பிந்துசாரன் தன்னுடைய மகன்களில் யார் இளவரசன் என்று தகுதி வாய்ந்தவனைத் தேர்வுச்செய்ய போட்டியாக யானை ஏற்றம் செய்திடுவதை அறிவிக்கின்றான்.  அதில்  அசோகன் வெற்றி பெறுகிறான்.  பாடலிபுரத்திற்கு அசோகர் இளவரசர் ஆகிறார்

 திருஸ்டிராசனும் அவ்விதமாக துரியோதனன் குதிரை ஏற்றம் செய்வதிலும் ஓடும் தேரில்சென்றவாறு போரிடுவதிலும் இளவரசன் பட்டத்துக்குத் தகுயானவனா என்று அறிய நடத்திய போட்டியில் துரியோதனன்  வெற்றிப் பெற்றதால் அவன் அஸ்தினா புரத்திற்கு இளவரசன் ஆகின்றான்.

 சோகனின் அண்ணன் சுஷிமா போர்திறன் மிக்கவன் அல்ல; அதனால் பாடலி புரத்திற்கு,    அசோகர் தொடர்ந்து இளவரசர் எனும்படிக்கு தகுதியுடையவராகிறார். அந்தப்படியே துரியோதனன் அஸ்தினாபுரத்துக்கு இளவரசன் ஆகிறான்.

 சோகனின் உடன் பிறந்த தம்பி   பெளத்த மதகுருவாக இருந்து அண்ணன்               அசோகனுக்கு நாடாள பக்கபலமாக உதவி புரிந்தவன். அவ​​னேபோல் மகாபாரதத்தில் துரியோதனனின் உடன் பிறந்த  தம்பி  துச்சாதனன் ஆதரவாளனாக ஆகிட்டான்

பிந்துசாரன் மறைவுற உடன்நிகழ்வாக உண்டான வாரிசு உரிமை  போரில் அசோகரால் மூத்த அண்ணன் சுஷிமா தோற்கடிக்கப் படுகிறான்;  முடிவில் கொல்லப்படுகிறான்.

 மகாபாரதத்தில் பாண்டவர்களில் எல்லோரிலும் மூத்தவன்அண்ணன் கர்ணன் தம்பிஅர்ச்சுணனால் அம்பு எய்து​க் கொல்லப்பட்டதாக கதைப் பதிவு உள்ளது.

 வரலாற்றில் அசோகர் இந்திய துணைக்கணடம் முழுவதும் அதற்கப்பால்  வடக்கேயும் வடமேற்கிலும்  [நட்புநாடுகள், கேரளம்/தமிழகம் தவிர்த்து] எண்ணற்ற  நாடுகளைவெற்றிகொணடு தன்னுடைய பேரரசோடு  இ​​ணைக்கின்றான் அந்நடவடிக்கைக்கு அசோகர் இட்ட  பெயர் திக்விசயம்..

 மகாபாரதத்திலும் திக்விசயம கர்ணனால் தனது பலத்தை அதிகரிக்க துரியோதனன் சார்பில்  மேற்கொள்ளப்படுகிறது. நட்புநாடு விராடநகரம் (தமிழகம்)  தவிர்த்து இந்தியதுணைக் கணடம் முழுவதும்   அனைத்து நாடுகளையும் தோழ்வியுற செய்கின்றான்.

 தமிழகத்தின் மதுரை மாநகரை மகாபாரதத்தில் மதுராநகர் என்று  பெயர்மாற்றம் செய்யப்ப்ட்டுள்ளது. சென்னைப் பட்டினம் மகாபாரதத்தில் விராடநகரம் என்று குறிப்பிடப்படுகிறது திராவிடநகரம் என்பது மகாபாரதத்தில் விராடநகரம் ஆகிட்டது.

மெளரிய பேரரசின் தலைநகரம் பெயர் பாடலிபுரம்; மகாபாரதம் கதையில் துரியோதனின் நாடு அஷ்த்தினாபுரம்; சரித்திரத்தில் பாடலிபுரம் என்பதானது பாரத கதையில் அஷ்த்தினாபுரம் என்று ஓதப்படுகிறத்து.

வரலாற்றில்  அசோகர் கலிங்க வணிகமீனவ பெண் ஒருத்தியை   (பெயர், தேவி) காதலித்தான்; உஜ்ஜைன் வைஸ்ராயாக இருந்த போது அவரை மணந்தார்.

பாரத கதையில் கலிங்க சுயம்வரத்தில் அவமதிப்பு நிகழ, துரியோ  தனனுக்கு, அது கவுரவ பிரச்சினை ஆக;  இளவரசி (பானுமதியை)   கடத்திச்சென்று அஷ்த்தினாபுரத்தில் அவன் மீது அவள் காதல் வயபட திருமணம் செய்தான் என்பதாக கற்பன உள்ளது. 

 மெளரிய பேரரசு நிருவனர் ச,ந்திரகுப்த மௌரியாவின் மனைவி புத்த  மதம்  சார்ந்த்தவர்;  சந்திரகுப்த மௌரியாவின் மகன் பிந்துசாரரும் பெளத்தர்தான். பிந்துசானின் வேட்டுவ உறவு மனைவி  பெளத்த மதம் சார்ந்த,  தம்ம (தர்மா)வின் இரண்டாவது மகன் அசோக மௌரியா.  

 பெளத்த மார்க்கம் புலக்கத்தில் இன்றும் ஒலிக்கும் “தம்மம் சரணம் கச்சாமி” எனபதன் ஆதாரம் தம்மா; அதனால் பிறப்பால் அசோகர்   பௌத்த மதம் சார்ந்தவர்.  தவிர பெளத்தத்தை பற்றிய அறிமுகத்தை மனைவி தேவியிடம் இருந்தும் அசோகர் பெற்றிருக்கிறார். ஆக அவராலும் அசோகருக்கு பெளத்தத்தில் நாட்டம் ஏற்பட்டது.

அசோகர் அரசராக பாடலிபுரத்தில் அரியணை ஏறி தனது ஆட்சியின் 4வது ஆண்டின்போது பௌத்தத்துக்கு மாறினார் என்று ‘வரலாறு, 'இலங்கை மரபு’ குறிப்பிடுகின்றது. இவரது ஆட்சிக் காலத்தின் 5ஆம் ஆண்டு முதல் 7ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் 84,000 புத்த விகாரங்களைக் கட்டினார் என்றும் பதிவுகள் குறிப்பிடுகின்றன.  

அதனால் கலிங்கபோர் (அசோகரால் மேற்கொள்ளபட்டதல்ல)  பிரதம அமைச்சர் சாணக்கியனால் கலிங்கபோர் நிகழ்ந்தது;  அந்நிகழ்வு பாடலிபுரத்தில் அசோகர் அரியணை ஏறி... (8) ஆம் ஆண்டு உண்டானது

எக்கர்மோன்டு போன்ற சில அறிஞர்கள் ‘இலங்கை  மரபை’ அடிப்படையாகக் கொண்டு கலிங்கப் போருக்கு முன்னரே அசோகர் பௌத்தத்திற்கு மாறினார் என்று நம்புகின்றனர்.

இக்கோட்பாட்டை விமர்சிப்பவர்கள் அசோகர் ஏற்கனவே ஒரு பௌத்த மதத்தினராக இருந்திருந்தால் அவர் வன்முறை நிறைந்த கலிங்கப் போரை நடத்தியிருக்கமாட்டார் என்று வாதிடுகின்றனர்.

இந்நிலையால் அசோகன் கலிங்கப் போருக்கு பிறகே புத்த மதம் தழுவியதாக வரலாற்றுச் சுவடிகளில் பார்பனர்களால்  பதிவு செய்யப் பட்டது பொய்  (ஊழல் மோசடி) ஆகிற்று.

அசோகன் அரசவம்சம் சாராத கலிங்க சாதாரன வணிக பெண்ணை (பெயர் தேவி) மணம் புரிந்து புரட்சியாக சமத்துவத்திற்கு வித்திட மக்கள் மனமாற்றமுற்று  பௌத்தத்திற்கு மாறிடுவது பரவலானது. அந்தபெண் (தேவி)  புத்தமதம் சார்ந்தவள்; திருமணத்திற்கு பிறகு அசோகர் பௌத்த்த மத ஈடுப்பாட்டில் தீவிரமாகி இருக்கிறார்.

இந்நிலையில் அசோகன் தன் காதல் மனைவியுடன் பௌத்த மதத்தை நிறுவுவதற்காக இலங்கையில் முகாமிட்டிருந்த கால  இடைவெளியில் சாதி ஆதிக்க வெறியன் சாணக்கியனால்  கலிங்கபோர் பெளத்தபரவலை தொடராதபடி தடுக்க நிகழ்ந்துற்றது.

மௌரியப் பேரரசின் பிரதம அமைச்சராக அந்தபடி சேனை அதிபதி யாகவும் சாணக்கியன் பதவிவகித்தான். மன்னர் அசோகர் இலங்கை சென்றிருந்த அவனுடைய இனிமையான தேனிலவு கால...  

சூழ்நிலை இடையே சாணக்கியன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கலிங்கம் மீது  தன்னிச்சையாக அப்போரை மேற்கொண்டான். 

பௌத்த 'தொண்ம கதைகள்' கலிங்கப் படையெடுப்புப் பற்றி அசோகர் கலிங்கம் மீது போர் தொடுத்தார என்பதாக அந்நிகழ்வுகளில் எதையும் குறிப்பிடவில்லை.

மெளரிய பேரரசில் (சரித்திரத்தில்) கலிங்க போருக்குப்பின் சாணக் கியன், விஷ்ணுகுப்தன் என்று பெயர்மாற்றம் அடைகின்றான். கலிங்கம் குப்தர்(கள்) அரசாகின்றது.

குப்தர்கள் (பார்ப்பனர்) ஆட்சி காலத்தில் சூழ்ச்சிபடிக்கு பேரரசர் அசோகர் வாழ்கை சரித்திரம் (மறைவுக்குப்பின்)  மகாபாரதமாக கதைப்படுத்தபடுகிறது;

அந்தபடிக்கு சரித்திரத்தில் விஷ்ணுகுப்தன்,  (சாணக்கியன்) பாரத கதையில் வாசுதேவ கிருஷ்ணன் என்பதாக கற்பனை செய்யப் படுகிறான்.

அசோகருடையது சரித்திரத்த்தில்  அசோக தர்ம சக்கரம்;  (இன்று இந்திய தேசிய சின்னம்).  மகாபாரத்தில் அது  "சுதர்சன சக்கரம்" வாசுதேவ கிருஷ்ணன் பயன்பாட்டில்  இருந்திட்டது என்பதாக கதைப்படுத்த  பட்டுள்ளது. அந்தபடிக்கு ºì¸ÃÀ¡½«Š¾¢Ãõ என்பது  ¸÷½ý À¡ïº¡Ä¢¨Â Á£ð¸ ¦ƒÂŠ  À¢Ã¾ý ¸¼ò¾¢ð¼ §À¡Ð «¨¾ ¾Îì¸ ¸÷½ý ±ö¾¢ð¼Ð.

வரலாற்றில் அசோகன் கலிங்கம்மீது போர் தொடுக்கவில்லை  என்பதற்கும், விஷ்ணுகுப்தன் என்றுப் பெயருறும் முன்பாக சாணக்கியன் கலிங்கத்தின் மீது படை எடுத்து கலிங்கத்தை வென்றான் என்பதற்கும் (பாரதகதை கற்பனைப்படிக்கு)...

வாசுதேவ கிருஷ்ணன் கலிங்கராயனை வெற்றிகொண்டு [இந்து பாம்பு அய்ந்து  சாதிகள் அன்ன] தலைகள் கொண்ட ஆதிசேசனின் (கலிங்கராயன்) அய்ந்து தலைகள் மீது நடனமாடினதாக உள்ள கதையை ஆதாரமாக கொள்ளலாம். [அவ்வாறு கிருஷணன் ஆடினான் என்பதாக பாரதத்தில் வதந்தி பதிவு உள்ளது]

மௌரிய பேரரசு வரலாற்றில் அசோகன் பெயரில் கலிங்கப் போர் பிரபலமானது. அதனால் ஒன்றை லட்சம்பேர் மாண்ட கலிங்கப்   போர் பாரதகதை கற்பனையில் 'பாரத யுத்தமாக'  மாற்றி பிரபலப் படுத்தபபட்டது.

வரலாற்றில் கலிங்கப்போரில் சாணக்கியனால் ஏற்படுத்தப்பட்ட பெரும் அழிவை அப்படியே பாரதப்போரிலும் நிழ்ந்துற்றதாக கதைப்படுத்த பட்டுள்ளது.

வரலாற்றில் விஷ்ணுகுப்தன் [சாணக்கியன்] பாரதப்போர் கற்பனைகளில் கிருஷ்ணனாக கதைப்படுத்தப் பட்டிருந்ததால் கிருஷ்ணன் கீதையாக பிரபலமான கலிங்க போர் விளைவுகளை கதைப்படிக்கு (சாணக்கியனின் அர்த்த சாஸ்திரத்தை) விளம்பர படுத்த முடிந்தது.

ஆரியர்களின் ஆளுகையில் (இந்து என்ற ஊழல் புனைப் பெயரில்) இந்திய துணைக்கணடம் முழுவதும் இருந்திட வேண்டும்.  இது அர்த்த சாதி சாஷ்த்திர சாணக்கியன் வரலாறறில் முதன்மை நோக்கம். [அதையே யுத்த  தர்மம் என்பதாக பாரதகதை கிருஷ்ணன் ஓதினான்]

முன்னதாக தனது நோக்கம் நிறைவேற பெரும் இடையூறாக சரித்திரத்தில் இருந்திட்ட நந்த வம்சத்தை முற்றுமாக அழிக்க சாணக்கியன் முற்பட்டான்.

நந்த பேரரசு வீழ்ச்சியில் மௌரிய பேரரசு தோன்றிட்டது. மாமன்னன் நந்தனிடம் சாதிபேத அமைப்பை நிறுவ தனது அர்த்த (சாதி) சாஸ்திரத்தை  நடைமுறைப்படுத்த] முயன்றான்;  தகவல் அறிந்த நந்த அரசனிடம் தன் முயற்சியில் தோற்று வமானபட்ட சாணக்கியன் பேரரசை விட்டு வெளியேறி வனங்களூக்குள் ஓடிஒளிந்தான்.

சாணக்கியன் காடுகளில் திரிந்த காலத்த்தில் மெளரிய பேரர்சர் அசோகரின் பாட்டனார் சந்திரகுப்த மௌரியா தனது பேரரசை நிறுவும் முன்பாக வேடவ வீரர்களுள் தலைசிறந்தவனா இருந்தான்.  சந்திரகுப்த மௌரியாவின் வீர்ர்களுக்கு பயிற்சி அளித்து மௌரிய பேரரசை நிறுவ சாணக்கியன் துணை நின்றான்.

இது மகாபாரத கதையில் நந்த பேரரசை வீழ்த்த அர்ச்சுனனை துரோணன வில்வீரனாக ஆக்கிட நந்த பேரரசை சார்ந்த ஏக-அலை(அ)வன் கட்டை விரலை  காணிக்கை பெற்றதாக கற்பனை ஓதலை நினைவுப்ப்படுத்துகிறது,

அந்தபடிக்கு  சாதி் சாணக்கியன். சந்திரகுப்த மெளரயாவின் படைகளை வழிநடத்த... பிந்துசார மெளரியாவின் அமைச்ச ரவையில் பிரதம மந்திரியாக ஆக [மகா பாரதம் கற்பனை படிக்கு பீஷ்மருக்கு நிகராக அதிகாரம் செலுத்திட்டவன்]  வரலாற்றில் கலிங்கப் போருக்கு பின்னர் விஷ்ணு குப்தன் என்று பெயர் பெற்றான்.

மகாபாரத கதை கற்பனையில் சாதி சாண இலக்கியன் 'கிருஸ்ணனாகிட் டான். அவனுடைய நூல் சாதி அர்த்தசாஸ்திரம் கீதா உபேசம் ஆகிறது. [கதை 'காதை' ஆகிறது; காதை, கீதையாக மாறுகிறது.] அது பாரப்பனரின் 'பிழை'ப்பு ஆதாரத்திற்கு  இன்றுவர உப(ரி) தேசமாகின்றது. 

ஆக மகாபாரதம் உருவாக அடித்தளமாக இருந்திட்டவன் விஷ்ணு குப்தன் [சாதி் சாணக்கியன்].  குப் பேராசின் கடைசி மன்னன் பெயரும் விஷ்ணு குப்தன். குப்த பேராசின் வீழ்ச்சி எப்படியோ அப்படி மகாபாரத கதை முடிவும் இறுதி நிலையுற்றது. 

[
அதாவது மகாபாரதத்திலும் கண்ணன் இறுதியாக செத்தான் என்பதாகத் தான் கதை உள்ளது.]

கதையை (நிழலை) நிசமாக்கிய் வந்தேறிகளின் முயற்சி  கற்பனை மகாபாரதம்.  அரைத்த மாவையே அரைக்கிற போக்கு மகாபாரதமும் இராமா யணமும்; முதலாவது புளித்தது; இரண்டாவது புழுத்தது. நஞ்சு மருந்தாகலாம் மருந்து விருந்தாகினால்  மரணம்தான் இறுதி முடிவு.

மேலும் பார்வையிடு:

வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்!: மகாபாரத பிழைதிருத்த மறுப்பதிப்பே இராமாயணம்! diraavidaannaitamil.blogspot.com/2024/08/blog-p

வரத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்!: விஷ்ணு அவதாரம் என்ற பித்தலாட்டம்>

சுண்டு:

Comments

Popular posts from this blog

தமிழ்நம் திராவிட(ம்) தாய்; உறவால் ஒன்ற...!

சுவாமி எனும் மூட மாயையில் விவேகானந்தர்...