மகாபாரத பிழைதிருத்த மறுப்பதிப்பே இராமாயணம்!
எவ்வுயிரும் காக்கஓர் ஈசன்உண்டோ இல்லையோ
அவ்வுயிரில் யான்ஒருவன் அல்லவோ? - வவ்வி
அருகுவது கொண்டிங்கு அலைவதுஏன் அண்ணே!
வருகுவது தானே வரும்
இதுத் திருவள்ளுவர் ஞானம்; கடவுள் இல்லை என்கின்ற அறிவியல் பகுத்தறிவை புலப்படுத்த்துகிறது. அவ்வையாரை நோக்கி... பாடப்ப்பட்டது.
மகாபாரதமா இராமாயணமா எது உண்மை? மூச்சுக் காற்றறியா கற்பனை தொகுப்புக்கள் இரண்டும் கூறியதுக் கூறற் பிழைகள்;
மகாபாரத பிழைதிருத்த மறுப்பதிப்பே இராமாயணம். மகா பாரதமும் இராமாயணமும் வரலாறுகள் அல்ல; அப்பட்டமான கதை காணல்நீர்
பொய்புரட்டுத் திரட்டு.
நம்பிக்கை தேன்தடவி நாட்டுநலம் கெடுக்கும்
வெம்பின மதம்சாதி வித்தைவிதைத் திடும்எவனும்
தம்பிநீ வாஎன தாவிதொற்றும மனநோய்
கவ்விட வாழ்ந்திடினும் காண்பது மரணமே!
கோழி இன்றி முட்டை இல்லை; ஆனால் மகாபாரத்தில் தாய் அறியா பெண்ணாக நெருப்புப் பிரசவிப்பில் பாஞ்சாலி “தீ”... சுவாலை களிடையே தோன்றினாளாம்.
இது இயற்கைபடி உயிர்களின் பிறப்பு நடைமுறைக்குப் பொருந் தாத கற்பனை. அதனால் மகாபாரதம் முழுவதும் கதை பதர் புலம்பலே. மெய்யாய் நடந்துற்றதாக நம்பிக்கை கொள்வதற்கு உண்மையான வரலாறல்ல. மகாபாரதம் கற்பனை விலகிய சரித்த்திரம் அல்ல என்பதால் வாசுத்தேவ கிருஷ்ணன் கடவுள் இல்லை. காணல்நீர் பொய்.
ஒருப் பானை சோற்றுக்கு ஒருச் சோறுப் (பருக்கை) பதம். இது நடப்பில் இயற்கையோடு ஒன்றிட்ட பழமொழி. இராமாயணத் தில் 14 ஆண்டுகள் வனவாசம் முடிவுற்று அயோத்தியில் அரியணை ஏறிய இராமன் ஆயிரம் வருடங்கள் நாடாண்டதாக கதைப் படுத்தப்பட்டுள்ளது.
இது இயற்கைபடி மானுட வாழ்நாள் நடைமுறைக்குப் பொருந் தாத கற்பனை. அதனால் மகாபாரதம் போன்றே இராமா யணமும் நடந்துற்ற நிகழ்வுகளின் தொகுப்பாக நம்பிக்கை கொள்வதற்கு ஏற்ற வரலாறல்ல. ஆக இராமன் கடவுளென்று ஓதுவோர் வஞ்சக உளரலானது காணல்நீர் கற்பனை.
பெற்ற தாய் தகப்பனிடம் பற்று நம்பிக்கையின் பாற்பட்டது. பெற்றோர் மீது நம்பிக்கை பிள்ளைகள் வாழ்வை மேம் படுத்துவது. கணவன் மனைவி மீதும் மனைவி கணவன் மீதும் காதல் அன்பு மயமானது; நம்பிக்கை காதலை தூய்மை படுத்து கிறது. குடும்பத்துள் நம்பிக்கை பாசம் ஒற்றுமை குதூகளிப்ப்பில் உணர்வுகளை நல்வழிபடுத்துகிறது.
இறைவனை நம்பு என்பவன் கடவுள் தன்னுடைய அதிகாரத்திற்கு கட்டுப்பட்டது என்று ஏமாற்றுகிறவன் அவ்ஊழல் பதர்களை ஆதரிப்பவன் வேற்றுமை தொற்றில் பேத ஆணவத்தில் பற்றுற்ற மனநோயாளி. அவனும் சாதிவழி ஆளுமையை தனதாக்கி கொள்ள தீய நடைமுறைகளை தேர்வுச்செய்து சூத்திர அவ தூறுகளை நீங்காது வம்புகள் புரிந்து நொந்து மடிகின்றான்.
தெய்வம்
உணடென்று நம்புகிறவன் மதம் சார்ந்து சாதி போற்றி
ஒற்றுமை
அருமையை புறகணித்து எதிர்கால சந்த்தியினரும்
அடிமை வாழ்கையை தொடர சிரமபட்டு வேற்றுமை பாதை களை செப்பனிடுகிற்றான். இதனால் வந்தேறிகளின் பிரித்தாளும் சூழ்சிகளுமம், ஆணவ ஆளுமை வன்கொடுமை அதிகார ஒடுக்குமுறைகளும் தொய்வின்றி தொடர்கின்றன.
அசோகர் மறைவுக்குப் பிறகு பெளத்தத்தை இந்தியாவில் இருந்து முற்றுமாக அகற்றுவது வந்தேறிகளின் இந்து ஆதிக்க அடங்கா வேட்கை ஆதங்கம். அவற்றறை தர்மம் என்கின்றான் அந்தப்படி கடவுள் நமபிக்கை மற்றும் சாதிகள் திணிப்பை நடைமுறைப் படுத்திடுவது மகாபாரதம் இராமாயணம் கதைவழி பரப்புரை கள் ஆரியர்களுக்குப் பிரதான சூது ஆயுதங்களாகியிருக்கின்றன.
மெளரிய பேரரசின் மூன்றாம் அசோக மெளரியா காலத் தில் பிரதம அமைச்சர் சாணக்கியன் பேரழிவுக் கலிங்க போருக்குப்பின் மகாவிஷ்ணு என்று பெயர் மாற்றம் அடைய பெற்றான். இது வரலாறு.
புராண கற்பனை மகாவிஷ்ணுவின் மறுஅவதாரமாம் மகாபாரத வாசுதேவகிருஸ்ணன். இராமன், தசரதனின் பிள்ளை பகவான் கிருஸ்ணனின் அம்சமாம். அதனால் பிழைத் திருத்தப்பட்ட மகாபாரத ஊழல் மறுப்பதிப்பு இராமாயணம் பொய்மயமானது,
கோழி இன்றி முட்டை இல்லை; இது இயற்கை நிலவரம். ஆனால் மகாபாரத்தில் துருவன் மகளாக தவத்தில் தாய் அறியா பெண்ணாக நெருப்புப் பிரசவிப்பில் “தீ” சுவாலைகளிடையே பாஞ்சாலி தோன்றினாளாம்.
இராமாயணத்தில் அன்னை (பெற்றவள்) யார் எனபதுத் தெரி யாது வனத்தில் குழந்தையாய் சீதையை கண்டு அரசன் சனகன் மிதிலை கொண்டுச்சென்று அக்குழந்தைக்கு வளர்ப்புத்தந்தை ஆகினான்.
மகாபாரத்தில் பாஞ்சாலிக்குக் கணவர்கள் எண்ணிக்கை அய்ந்துப்பேர். இராமாயணத்தில் சீதைக்கு வாழ்கை துணைவன் இராமன்மட்டும். அதனால் இது இராமாயணத்தில் பிரமாதமான மகாபாரத கதை பிழைத் திருத்தம்.
மகாபாரத்தில்
பாஞ்சாலி கற்புடையவளா என்பது குறித்து துரி
யோதனன் சபையில் துகில் உரிந்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டதாம். இராமாயணத்தில் இராமனின்
மனைவியாகி சீதை தன் கற்பை நிரூபிக்க
நெருப்பில் இறங்கி உயிரோடு
மீண்டாளாம்
மகாபாரத்தில் ஜெயஸ்பிரதன், அவன் துரியோதன்னுக்கு அண்ணன் உறவாம்; வனத்தில் குகை ஒன்றில் பாஞ்சால தனியே மறைந்திருக்க அவளை கடத்திட்டதாக தகவல் உள்ளது. துரியோதனன் கலிங்க இளவரசி பானுமதியை தேரில் வைத்து கடத்தியதாக கதை. இராமாயணத்தில் இராவணன் புட்பவிமானத்தில் சீதையை தூக்கி சென்றானாம்.
மகாபாரத்தில் வான ஊர்தி அறிவியல் இல்லை என்பதால் மகாபாரதம் கதைப்படைப்பு. முதலாவது.
இராமாயண கற்பனையில் புட்பவிமானம்பயன்பாடு சொருகப் பட்ட விதத்தால் இராமாயண கற்பனை உருவாக்கம் இரண்டாவது.
மகாபாரத்தில்
கர்ணன் துரியோதன்னுக்க்கு நண்பனாகவும் பாதுக்காப்பாளனாகவும்
இருக்கின்றான். இராமாயணத்தில் இராமனின்
சேவகனாகவும் அடிமையாகவும் அனுமன் இருக்கின்றான். இராமனுக்கு நண்பனாக இருந்து உதவிட்டவன்
குகன்.
மகாபாரத்தில் குந்திக்கு வனவாசத்தில் இருந்த போது அய்ந்து மகன்கள் (ஐவரும் பாண்டு பிள்ளைகளாம்) பிறந்தனராம். ஆனால் ஓதுவோர் உளரல்கள்படி அவ்அய்வரும் பாண்டுவுக்கு பிறந்தவர்கள் அல்ல.
இராமாயணத்தில் சீதைக்கு வனவாசத்தின்போது லவ, குச என்று மைந்தர்கள் பிறந்த்தனராம். அவ் இருவரும் இராமனின் பிள்ளை களாம் அதனால் இது மகாபாரத பிழைதிருத்த மறுப்பதிப்பே இராமாயணம் என்று ஆயிற்று.
துரியோதனன்
மாமன் சகுனி சதி செய்து இட்ட தீயில் வனத்தில் பாண்டவர்களின் அரக்கு மாளிகை அழிந்திட்டதாம்; இது மகா பாரதம். அனுமன் இட்ட தீயுள் இலங்கை கருகிட்டதாம்;
இது இராமாயணம்
மகாபாரத்தில்
சதி செய்யல்கள் புரிவதில் தேர்ந்தவன் சகுனி; அவன் துரியோதனனுக்கு மாமன். இராமாயணத்தில்
சதி ஆலோசனைகள் வழங்குவதில் கைகேயிக்கு நெருக்க மானவளாக இருந்தாள்
பணிப்பெண் கூனி (பெயர் -- மந்தரை)
மகாபாரத்தில் துரியோதனனின் மாமன் சகனி ஏற்படுத்திய சூதாட்டத்தில் பாண்டவர்கள் பங்கேற்றுத் தோற்க அதனால் குந்தி மைந்தர்கள் மற்றும் அவர்களின் மனைவி பாஞ்சாலி ஆகியோர் 12 ஆண்டுகள் வனவாசம் + அஞ்ஞான வாசம் (ஓர் ஆண்டு) செல்கின்றனர். .
கைகேயியின் பணிப்பெண் கூனி என்பாள் இராமன் அரச னாவதை விரும்பவில்லை. அதனால், கைகேயியைத் தூண்டி விட்டு அப்பணிப்பெண் சூழ்சியால் இராமன், சீதை, இலட்சுமணன் மூவரும் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றனர்.
மகாபாரத்தில் யுதிஸ்ட்டிரன் வனவாச காலம் முழுவதும் தம்பி துரியோதனன் பாடலிபுரத்தில் அரசாள்கிறான். இராமாயணத்தில் இராமன் பரதனுக்கு அண்ணன். வனவாசத்தின்போது அயோத்தி எல்லையில் (அரசணையில் அண்ணனின் காலணிகளை வைத்து) தம்பி பரதன் நாடாண்டதாக கதை.
.மகாபாரதம் பிழை திருத்தத்தில் ஒரு மாறுப்பாடு இராமாயணத் தில்14 ஆண்டுகள் வனவாசம் முடிவுற்று பரதனுடன் போர் புரியாமல் இராமன் அயோத்தியில் அரியணை ஏறுகிறான் என்பதாக கதை.
அவ்வாறு அயோத்தியில் அரியணை ஏறி இராமன் ஆயிரம் வருடங்கள் நாடாண்டதாக இராமாயணத்தில் கற்பனை கதைப்படுத்தப் பட்டுள்ளது. இராமன் இராவணனோடு சண்டையிட்ட காலத்தில் பரதனோ அயோத்தி படைகளோ இராமனுக்குப் பக்கப்பலமாக போர்களத்துக்கு வரவில்ல்லை ஏன் என்பது ஆய்வுக்குறியது.
மகாபாரத்தில் 13 ஆணடுகள் வனவாசம் முடிந்துற்று ஆட்சி யை (அஸ்தினாபுரத்தை)க் கைப்பற்ற பாண்டவர்கள் துரியோதனனோடு போர்பரியும்படி ஆகின்றது. மகாபாரத்தில் போரில் கெளரவர்கள், பாண்டவர்கள் இருத் தரப்பிலும் இறந்தவர்கள் அபிமன்யு கர்ணன், துரியோதனன், என்று பட்டியல் நீள்கின்றது.
இராமாயணத்தில் இராமன் வனவாசத்தில் இருந்த காலத்தில் இராவணனோடு சண்டையிடுகிறான். இராவணனுடன் போர் நடந்துற்ற காலத்தில் இராமன் இலட்சுமணன் பரதன், அனுமன், விபீசணன் என்று எவரும் இராமன் தரப்பில் இறந்துப்படவில்லை.
இராவணன் தரப்பில் இராவணன் உட்பட தம்பி கும்பகர்ணன் மற்றும் உறவுகள் என்று செத்தவர்கள் கணக்கும் சேதாரமும் மிகுதியாக உள்ளது. ஆக இராமாயணம் கதை மற்றும் கற்பனை என்றுக் கருதலாம்; வரலாறாக ஓதப் படுகிற பட்சத்தில் சீீதையைை இராவணன் கடத்தவில்லைை; இலங்கையில் இராமன் இராவணனோடு போர் நிகழ வில்லை.
உண்மை (வரலாறுகள்) ஊழல்களாக இருக்கும் போது,
புரட்டுகள் எல்லாம் புனிதமாக்கப்பட்டிருக்கும் போது, ஆபாசங்கள் ஆண்டவன் லீலையாகியிருக்கும் போது, இருப்பதை எடுத்துச் சொல்வது தவறா? நடித்துக்
காட்டுவது தவறா? - நடிகவேல் எம்.ஆர்.ராதா
Comments
Post a Comment