சுவாமி எனும் மூட மாயையில் விவேகானந்தர்...
சுவாமி எனும் துணை சிறப்புப்பிழை சொல்லோடு உலாவரும் முன்பாக விவே கானந்தர் ஓர் நாத்திகர். அந்தப்படிக்கு -
“தென்னிந்தியாவில் உள்ள மக்களேதான் குரங்குகளாகவும்
அரக்கர்களாகவும் வர்ணிக்கப்பட்டார்கள்” என்று விவே கானந்தர் கூறினார்.
ஆனாலும் பேதசாதி வன்கொடுமையாளர்களால் அவமதிப்புச் செய்யப்பட்டார்கள் என்கின்ற உண்மையை வெளிப்படுத் தாமல் மேற்படி வர்ணிக்கப்பட்டார்கள் என்று கூறினார் என்பது சுவாமி எனும் மதமூட போதை மாயையில் விவேகானந்தர்... மூழ்கியிருந்தது பிழை காரணமாக இருக்க்கூடும்.
புத்தருடைய
பிறப்பும் இறந்துறும்வரை வாழ்ந்ததும் பெற் றோரும்
(தாயும் தகப்பனும்) உண்டென்பதும் அந்தப்படி சரித்திரத்தில் புத்தர் வாழ்கை உண்மை வரலாறு.
மகா பாரதம்போல் பாஞ்சாலி/பாண்டவர்போல் இராமாயணம்போல் இராமரைப்போல் புத்தர் வரலாறு கற்பனை கதை படைப்பல்ல.
மகா விசுணுவின் பத்தாவது அவதாரம்
புத்தர் என்பதாக வந்தேறிகள் ஓதுகின்றனர். ஆனால் புத்தர் வாழ்நாள் முழுவதும் ஒருப்போதும்
தன்னை கடவுள் என்பதாகவோ மகாவிசுணுவின் அம்சம்
என்றோ அவதாரம் என்றோ பொய்யாய் பரப்புரை செய்ததில்லை.
புத்தர் நாத்திகர்களில் முதன்மையானவர்.
எதையும் மற்றும் எதிலும் ஏன் எதனால் எதற்கு என்றுத் தனக்குள் வினாக்கள் கேட்டு உரிய
விடை அறிந்து மக்களுக்குப் போதித்தவர். அதனால் வினா-நாயகர் ஆகினார்.
வந்தேறிகளால் புத்தர் கொலையாகி மரண முற்ற பின்னர் கணபதி புராணம் என்றும்
வினாயகர் என்றும் கற்பனைகளை கதைப் படைப்புக்களாக்கி புத்தருடைய அறிவியல் ஞான போதனைகளையும் வரலாற்றையும்
இருட்டடிப்புச் செய்யப்பட தொடர்ந்து பொய்யை யாகம் என்று நெய்ஊற்றி ஓதப்படுகிறது.
புத்தர் கொலையாகி மரணமுற்ற பின்னர் கற்பனை வினாயகர் புராணம் கதைப் படைப்பாகினதால்,
இராமாயணத்தில் மிதிலையில் இராமருக்கு சீதையுடன் திருமணம் வினாயகர் முழுமுதற்கடவுள்
என்பதாக (சிலை) முன்னிலையில் நடந்துற்றதாம் கதையுள்ளது அடிப்படையில் –
இராமாயண கற்பனைகளும் புத்தரது மறைவுக்கு பிறகுதான் கதையானது. ஆனால்
அவ்வாறு கதைகளின் படைப்பு நிகழ்துற்றது இதிகாச காலமாம். இவ்வாறு பொய் ஓதுவோரால் தொடர்ந்துப்
பரப்பரை செய்யப்படுகிறது.
இராமாயணமும்
மகாபாரதமும் கண்ட நியதிப்படி, அவை இராமரையும் கிருஷ்ணரையும் சார்ந்திருக்க வேண்டியதே
இல்லை. இராமாயணத்தில் வரும் பத்துத் தலை அசுரன் வாழ்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
- விவேகானந்தர்.
அதனால்.... விவேகானந்தர் கூற்றுப்படி விஷ்ணு புராணம், இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்கள் வரலாற்று உண்மை அல்ல;
கிருஷ்ணரும், இராமரும், இராவணனும் ஓதுவோன் கற்பனை பதர் காணல்நீர் சொற் துகள்களே!
சஙக-காலத்திலும் அய்யனாக பறையபட்டோனே ’பா” இயற்ற, பாநூல் படைக்க அனுமதிக்கபட தகுதியுடையவன் என்றாற்போல் வந்தேறிகளின் ஆதிக்க நிலவரம் (கேடுப்பிடிகள்) இருந்துள்ளது.
அந்நாள் நடைமுறைப்படி
திருக்குறளை நூல் அங்கீ காரத்திற் காக சங்கதமிழ் உறுப்பினர்களிடையே (சங்கபலகையில்) வைக்க முற்படும்போது வந்தேறிகள் “நீவிர் என்ன அய்யரோ?” என்று வினா தொடுக்க, திருவள்ளுவர்
மிடுக்குடன் பதிலாக அருளியது.
அய்யரோஎன் றுரைத்தீர்மெய் அய்யன்யார்? அறிகிளீர்!
பொய்யொடுக்
களவுமற்றுப் புலன்களை ஒடுக்கிகொண்டு
உய்யவே புலன்களைந்தும்
உயர்வுற வெளிஉள்ஆகி
வெய்யவன்
மதியும்போல் விரவுவார் அய்யராவார்!
-- இதுச் சாதி
தொற்றற்ற திருவள்ளுவர் ஞானம்.
பொய் எனபடுவது
சாதி; உழைக்க்காத ஓதுவோர்கு வாழ்வா தாரமாக இருந்து
வருவதால் களவு எனப்படுவது மதம்; பொய் மற்றும் களவு நிலைகளின் கலவையாக இருந்திடுவது
சனாதனம். சனம் என்பது சாதி ஓதுவோர் (சனம், ‘சனா’ ஆகிட்டது); தனம் (செல்வம்) என்பது
மதம். பொய்யொடுக் களவுமற்று என்பதற்கு விளக்கம்
– சாதியொடு மத(மு)ம் அற்று.
(வந்தேறிகளின் ஆணவ சொருகல் மரபிலக்கணம் மீறியது நிலையால் “நாயே னுக்கு அடுக்குமோ?” என்ற பதர்பழுதுகள் அகற்றி “”மெய் அய்யன்யார்? அறிகிளீர்!” என்று மேற்படி பாடல் ஆரம்பவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
“சுவாமியே!
சரணம் அய்யப்பா” என்ற மதஒலிப்பு பிரபலமானது.
அந்தபடி கடவுள் என்பதற்கான பிரிதொரு கற்பனை உறிச்சொல் “சுவாமி”. கடவுளே கற்பனை என்றாக வள்ளுவர் ஞானம்படிக்கு தகுதியற்றோரை
(ஒழுக்ககேடரை) அய்யர் என்பதும் சுவாமி என்று சொல்மகுடம் சூட்டுவதும் ஊழல்களாகும்.
இந்நிலையால்,
‘சுவாமி’ என ஓதுவோனின் ஏய்க்கும் அழுக்கு ஊழல்சொல் அடைமொழிக்கு விவேகானந்தர் ஏற்றவரல்ல.
விஷ்ணு புராணம், இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங் களில்
வரலாற்று உண்மை உள்ளதா என்ற இந்து பத்திரிக்கை நிருபரின் கேள்விக்கு அளித்த பதிலில்
சுவாமி விவேகானந்தர் கூறியதாவது:
"ஏதோ ஒரு வரலாற்று உண்மையே புராணத்தின் கருவாக உள்ளது. உயர்ந்த
கருத்துக்களைப் பல வடிவங்களில் மக்களுக்குக் கற்பிப்பதே புராணங்களின் நோக்கம்... இராமாயணமும்
மகாபாரதமும் கண்ட நியதிப்படி, அவை இராமரையும் கிருஷ்ணரையும்
சார்ந்திருக்க வேண்டியதே இல்லை.
“வரலாற்று உண்மையே புராணத்தின் கருவாக உள்ளது” என்ப தில் பிரதானமாக வெளிப்படுகிற கரு (நோக்கம்) மக்களை சாதிகளை திணித்துப் பிளவுப்படுத்தி ஆளுமையை அடைவது. அதனால் மகாவிஷ்ணு அம்சமாக இராமரையும் பரமாத்மாக கிருஷ்ணரையும் புலம்புவது ஓதுவோர் புராண உளரல்கள் காணல்நீர் நம்பிக்கை பாற்பட்டவை.
.இராமாயணமும் மகாபாரதமும் கண்ட நியதிப்படி, அவை இராமரையும் கிருஷ்ண ரையும் சார்ந்திருக்க வேண்டியதே இல்லை. ஆனால்
அவை உயர்ந்த கருத்துக் களை மனித இனத்தின் முன் வைப்பதால், அவற்றைச் சிறந்த அடிப்படை நூல்க
ளாகக் கருத வேண்டும். – விவேகானந்தர்.
அவ்வாறான உயர்ந்த கருத்துக்கள் எவை என்பதுக் குறித்து ஆதாரங்களை விவேகானந்தர் தரவில்லை. கற்பை நிரூபிக்க சீதையை தீகுளிக்க செய்த இராமனை கடவுள் என்று ஓதுவதும் பாஞ்சாலிக்குக் கணவர்கள் அய்ந்துப் பேர் என்றுப் பெண்ணடி மை போற்றுவதும் உயர்ந்த கருத்துக்கள் பிரதிபளிப்பா? என்றால் அறிவுடைய தேசபற்றுடையோர் மறுப்பர்.
இராமாயணம் இராமரை கடவுளாக விளம்பரம் செய்திட்ட நிலை யில் வந்தேறிளின் சாதி அடையாளமாக இராமர் வாழ்நாள் முழுவதும் நேர்மையின்றி மேனியில் (பூ)நூல் அணிந்தும் நெற்றியில் மதவெறி நாமம் தரித்தும் திரிந்தது ஏன்? என்பது போன்ற கேள்விகள் இந்து பத்திரிக்கை நிருபரால் கேட்கப் பட்டனவா? தகவல் இல்லை.
எந்தப் புராணமானாலும் சரி, அதிலுள்ள தத்துவத்தை அறிய, அதில் வரும் பாத்திரங்கள் உண்மையா கற்பனையா என்ற ஆராய்ச்சி தேவையில்லை
– விவேகானந்தர்.
இதனால் விவேகானந்தருக்கு எதிலும் தெளிவெது என அறிய ஆராய முற்ப்படாத இந்த முடிவு நாட்டின் ஒட்டுமொத்த
மக்கள் ஒற்றுமை முன்னேற்றம் மற்றும் நலன்மீது அக்கறை இல்லை என்பதும்
தேசத்தின்பால் பற்றற்றவர் என்பதும் தெரிகின்றது.
மனித இனத்திற்குப் போதிப்பதே புராணங்களின் நோக்கம். இராமாயணத்தில் வரும்
பத்துத் தலை அசுரன் வாழ்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் ஓர் உண்மைப் பாத்திரமா
அல்லது கற்பனையா என்ற கேள்வியைத் தள்ளி வைத்துவிட்டு, அவன்மூலம் நமக்கு என்ன போதிக்கப்பட்டுள்ளது
என்பதை அறிய வேண்டும்.- விவேகானந்தர்.
மனித இனத்திற்கு கேடுகள் என்றாகிட்ட நிலைமையில் “போதிப் பதே புராணங்களின் நோக்கம்” எனபதானது புராணங்களே அவசியமற்றது என்றாயிற்று. அந்தபடிக்கு இராமாயணம் அவநம்பிக்கை பாற்பட்டது அதனால் உண்மையில் வரலாறல்ல என்பதே விவே கானந்தர் உள்மனம் தெரிவித்திட்ட அறவியலை பொருட்படுத்தாத தன்மை யிடையே தோன்றிட்ட வெளிப்பாடு.
கையூட்டு நம்பிக்கை கடவுள்கொள்; உண்மைஅள்
மெய்பாட்டு தெய்வம்இல்; மீட்டுக் கருஅறைஉள்
பொய்தீட்டுத் தீய்;போய்....
புகழ்குறள் பாவழியே
உய்யஒழி காணல்நீர் ஊழல்!
விவேகானந்தனின் பகுத்தறிவு அடிப்படையிலான அறிவிப்புக் கள் விஷ்ணு புராணம், இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்கள் வரலாற்று உண்மை அல்ல என்பதை முற்றுமாக மெய்பிக்கும் கருத்துக்களாக அறிவியல் சார்ந்திருந் திருக்குமானால் யாவும் போற்றுதலுக்குறியவை.
மேலும் படி: வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்!:
மகாப்பாரதம் கற்பனை ஓதலுக்கு மூலகதை அசோகரின் வாழ்க்கை! diraavidaannaitamil.blogspot.com/2024/07/blog-p
Comments
Post a Comment