நம் விடுதலை, கல்வி மற்றும் அரசியல் அதிகாரத்தில்தான் உள்ளது.

 முல்லைத்தீவு முற்றுகை இறுகிக்கொண்டே வர, விடுதலைப் போராட்டம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் பிரபாகரன் களத்தைவிட்டு அகலவேண்டுமென்று தளபதியர்கள் முடிவெடுத்தபோது அதை ஏற்க மறுத்தார் பிரபாகரன்.

என்னை நம்பி வந்த மக்களையும் போராளிகளையும் விட்டுவிட்டு நகரமாட்டேன் என்பதில் பிடிவாதமா(க) யிருந்திருக்கிறார். அவரது மகன் 24 வயதே ஆன சார்லஸ் அன்டனி மே 18-ந் தேதியன்று களத்தில் வீரமரணம் அடைந்தார். மகள் துவாரகா 22 வயதே ஆன துவாரகாவும் அதே மே-18-ம் தேதியன்று களத்தில் வீர மரணம் அடைந்தார்கள்.


நம்முடைய விடுதலை, கல்வி மற்றும் அரசியல் அதிகாரத்தில் 

தான் உள்ளது... நீ காவடி தூக்குவதிலோ உண்ணாவிரதம் 

 இருப்பதிலோ அல்ல... என்றும் புரட்சியாளர் வழியில் > Salaar vck

 @salaaroffice 

Conversation

காசி ஆனந்தன் ஐயா, பழ நெடுமாறன் ஐயா உங்களுக்கு ஏன் இந்த வேலை? மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடி இன்னுயிரை உயிரை ஈகம் செய்தவர்களை ஏன் இப்படி இழிவு செய்கிறீர்கள்? உங்களுக்கு எல்லாம் தெரிந்தும் மக்களை இனியும் முட்டாள்கள் ஆக்க வேண்டாம். தமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள். 2002-ம் ஆண்டு தலைவர் பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா?” எனக் கேட்டபோது……. அதற்குரிய வயதாகிறபோது அம்முடிவை அவர்களே எடுப்பார்கள்” என்று கூறிய அவர், “”உண்மையில் இயக்கத்தின் எல்லா போராளிகளையும் என் சொந்த பிள்ளைகளைப் போலவே நான் உணர்ந்து நடத்தி வருகிறேன். போராளிகளுக்கும், என் பிள்ளைகளுக்குமிடையே நான் எவ்வித வேறுபாட்டையும் பார்ப்பதில்லை” என்றார். தலைவனின் மகனென்று ஒருபோதும் தன்னை காட்டிக் கொள்ளாத குழந்தை சார்லஸ் அன்டனி. படித்தது யாழ்ப்பாணம் செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில். வருவதும் போவதும் எவருக்கும் பெரிதாகத் தெரியாமல் யாழ்ப்பாணத்தின் ஒரு சாதாரண மாணவனாகவே சார்லஸ் அன்டனி அப்பள்ளியில் படித்திருக்கிறார். அவர் விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டதும் வன்னிக் காடுகளில் தானேயன்றி வெளிநாட்டில் அல்ல. வருவதும் போவதும் எவருக்கும் பெரிதாகத் தெரியாமல் யாழ்ப்பாணத்தின் ஒரு சாதாரண மாணவனாகவே சார்லஸ் அன்டனி அப்பள்ளியில் படித்திருக்கிறார். எவரையும் காயப்படுத்தாத, எவரிடமும் ஆணவமோ அதிகாரமோ காட்டாத, எல்லோரிடத்தும் “அப்பா, மாமா, அண்ணே… என்று குழைந்து திரியும் குழந்தை என்றே அத்தனைபேரும் சார்லஸை கொண்டாடினார்கள். துவாரகா அமைதியான பிள்ளை. தெய்வீக ரோஜாபோல் எப்போதும் கள்ளமில்லா வெள்ளை முகம். “எனது தேவதை இந்தப் பிள்ளை’ என ஆன்றோர் கனிந்துருகக்கூடிய அன்புள்ளம் கொண்ட அருட்கொழுந்து துவாரகா என்கிறார்கள். அயர்லாந்து டப்ளின் நகரில் மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு, அங்கே தங்கி விடாமல் தமிழீழ மண்ணுக்குத் திரும்பி “#மாலதி_படையணி’யில் நின்று களமாடினார் துவாரகா. முல்லைத்தீவு இறுதி முற்றுகையின்போதும் கலங்காத காரிகையாய் அதே மாலதிப் படையணியில் முன்னணிப் போராளியாய் நின்று களமாடிய என் இனத்தின் காவியம் துவாரகா. எழுதும் போதே கண்கள் பனிக்கின்றன. எங்கள் ப்ரியமான சிறு தெய்வங்களில் ஒன்றாகிவிட்ட துவாரகா… எவருக்கும் தெரியாமல் வன்னிக் காடுகளுக்குள் பூக்கள் மலரும் காலம்வரை… முல்லைத்தீவு கடல்வெளியில் மௌனமாய் காற்றுவீசும் காலம் வரை உன் நினைவுகளும் உயிராய்… உணர்வாய் அவற்றையும் கடந்த தெய்வீகத் தேடலாய் எம்மிடையே நிற்கும். மே 18. அதிகாலை 2 மணிக்கு முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதி யுத்தம் தொடங்கியது. சிறப்பு படையணியில் சார்லஸும், மாலதி படையணியில் துவாரகாவும் நின்று களமாடினார்கள். கிளிநொச்சி விழுந்தபின் சார்லஸ் சிறப்பு அதிரடிப் பிரிவொன்றின் அங்கமாய் புலமொட்டை காட்டுப் பகுதிக்குள்தான் நகர்ந்து நின்றிருக்கிறார். ஆனால் முல்லைத்தீவு முற்றுகை இறுகிக்கொண்டே வர, விடுதலைப் போராட்டம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் பிரபாகரன் களத்தைவிட்டு அகலவேண்டுமென்று தளபதியர்கள் முடிவெடுத்தபோது அதை ஏற்க மறுத்தார் பிரபாகரன். என்னை நம்பி வந்த மக்களையும் போராளிகளையும் விட்டுவிட்டு நகரமாட்டேன் என்பதில் பிடிவாதமாயிருந்திருக்கிறார். அவரது மகன் 24 வயதே ஆன சார்லஸ் அன்டனி மே 18-ந் தேதியன்று களத்தில் வீரமரணம் அடைந்தார். மகள் துவாரகா 22 வயதே ஆன துவாரகாவும் அதே மே-18-ம் தேதியன்று களத்தில் வீர மரணம் அடைந்தார்கள். தமிழுலகே, இப்படியோர் அப்பழுக்கில்லா உன்னதம் மிக்க தலைவனை உலகில் வேறெந்த விடுதலை இயக்கமும் கண்டிருக்கவில்லையென என்தே உண்மை. ஆகவே மதிப்புக்குறிய வயதான ஐயாக்களே, #தனி_ஈழம்_ஒன்றே_தீர்வு என்கிற உயரிய இலக்கை அடைவதற்காக களத்திலே போராடி உயிரை ஈகம் செய்த மாவீரர்களின் அப்பழுக்கற்ற தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள். மீண்டும் மீண்டும் அதையே செய்தால் தமிழர்கள் வரலாறு உங்களை மன்னிக்கது.
Image

மானுடம் சிதைவுற உண்டு, மதம்... கொப்பளிக்க சாதி...

ஓநாய்கள் ஊளையிடுகின்றன! பேத சூறாவளியை

கிளப்பிவிட்டு; இனவெறி பூகம்பம்... அமைதியாய்

பதுங்கிக்கொண்டது! தீண்டாமை அன்ன  

துயரபுயலை கடந்திட; கப்பல் ஒன்று...

கல்விகரைத் தொட்டது! எங்கிருந்தோ ஒரு

அன்னிய... வேற்றுமைத் தீப்பொறி;

பைத்தியமாய் மாறி, அய்யகோ...

உள்ளம் பதைக்க, விழிகள் சிவக்க...

 உதிரம் சிதற... கதிரவன் ஒளியிழந்திட்டது!

சாதிசாண எரிகங்கு! இந்தவா வாழ்ந்ததால்... கொன்றிட்டது!

ஆக சுதந்திரம் அடையும் முன்பாகவே, நீவிர்

காந்திக்கு நிகராகினிர்!!

 “பார்ப்பானே வெளியேறுமுழக்கம் இங்கு(ம்)

ஓர்நாள்; நிச்சயம் கருத்தரிக்கும்!


Comments

Popular posts from this blog

மகாப்பாரதம் கற்பனை ஓதலுக்கு மூலகதை அசோகரின் வாழ்க்கை!

தமிழ்நம் திராவிட(ம்) தாய்; உறவால் ஒன்ற...!

சுவாமி எனும் மூட மாயையில் விவேகானந்தர்...