உயிர்கொடுக்க உயிர்த்தெழும் உயிர்...
உயிர்கொடுக்க உயிர்த்தெழும்
உயிர்... அம்மா!
கன்னிநான் ஆண்டாள்அன்ன கன்னி பரமேஸ்வரி
உன்னை நேரில் சந்திக்கமுடியாதபடி - இங்கே
பறைஅய்யர் பெண்ணே!என் பஞ்சமி கண்ணேகேள்!
அன்னைநான்ஆதி பறைசக்தி சொல்கின்றேன்!
என்மகளே! ஆகமவிதிஉனக்குதடையில்லை!
என்னை பூசைசெய்திட தினம்நீ கோயிலுக்குள்...
வந்திடனும்; பூசாரியாய் நீயேஆகிடனும்! உனக்காக-
தீண்டாமை ஒழிப்புச்சட்டம் பாதுகாப்பில் உள்ளது!
பூசாரிஎனும் பெயரில்ஓர் பூரிஆசாரி யான்தினம்
தாவணியை கலைகின்றான்; பாவாடையை-
அகற்றுகின்றான்; நிர்வாணமாக்கி பூபோட்டு;
என்மேனியை தொடவும், கழுவவும், செய்கிறான்!
கம்பிளிப் பூச்சி ஊருகிறபடியும் உணர்வேதும்-
இல்லாதபடி நாசமாய் போனஓர் மனுட சிற்பிகல்
செதுக்கி என்னை சிலையாக்கி கடவுளச்சியாய்
கோயில்சிறை கருவ றைக்குள் நிறுத்திட் டானே!
அதனால்ஆரியன் தொடுகிற போதொல்லாம்-
ஆற்றிலோ, குளத்திலோ, உயிர்விடவும்; எனக்கு-
முடியவில்லையே! ஆகம விதிதடை... என்மகள்!
உனக்கு எதற்கு? உணர்வு துடிப்பறிவேன் நானும்?
உன்னைச் சேரவேண்டிய கோயில் சொத்துக்கள்...
பஞ்சமிநில மேபோல் ஆண்டாண்டு களவாடப்பட்டு;
முத்துப்பவளம் தங்கம்வைரம் வைடூரியம்பிளாட்டினம்
கோயில் வளாகத்துக் குள்கருவறைக்கு கீழும்...
ஏராளமாய் இருந்தும் ஏழையாய் அடிமை ஆகினாயே!
கனவுஉனக்கு கலைகின்ற நேரம்; விலகுகிறேன்!
விழிஎழு அத்துமீறு; கோயில்க ளுள்நுழை!
யாருக்கும் பயன்படாமல் பூதங்களாய் அலையும்...
பூசாரிகளை விரட்டு பூசைகளை நீயேசெய்!
எல்லாம் நலமாக உனக்குவரம் அருள்வேன்!
![]() | KRS | கரச | 12h |
நிறைவேறாப் "பறைக்" காதல்! அந்த ஆசையெல்லாம் ஒரு பெண் பாடுவதா?அதும் பக்திக் காலத்தில்? கடவுள் மேலேற்றிப் பாடினால், செல்லுபடி ஆகும்! ஆகியது!pic.twitter.com/odjG2k7IfF |
![]() | @kryes | |
[ஆண்டாள், Fairy Tale ஆக்கப்பட்டு விட்டாள்! ஆனால், அவள் கதை= சாதி மறுப்புக் காதல் கதை! அவள் விரும்பியது பெருமாளையா? "பறை"த் தமிழ் மகனை! ]pic.twitter.com/gHCugvsyK6] |
சோறுள் உப்பிலாது சுவையோ? வேர்வை…
சேறுள்! நடவுசெய்த இவர்என் இறைவன்!
ஊருள் சுழல்உலகில் இவரை தவிர…
தேர்இழுபட சாதிப் பன்றிகளின் கூட்டத்துள்;
நாறல் தீண்டாமை புரளும்! என்னைநீ தழுவு!
தூறுள் வாழ்மதம் வாறு தேசம் தூய்மைப்படும்!
குடைவிரி கொட்டும்மழை உடற்குளிரிடை
நடைமுறைப் படிஇடைபிடி தடையில்லை
இடைவழி இடம்பிடி இடைவெளி எதற்கு?
தொடைதொடு சுகம்வெளிப்பட தலித்காதல!
கடைவிழி கடைபட உடன்பட்டதே தழுவு!
இரண்டு மனைவியராம்! துரோகம் செய்து-
இரண்டு ஆயிரம் கோகுல பெண்களொடும்...
உருண்டு உவகை புரிந்தானாம்! பரந்தாமனாம்!
இறைவனே என்றாலும் வேண்டாமோ கற்பு?
இரண்டா யிரத்து மூன்றாக, கன்னியாம்-பால்
நுரைஅன்ன உள்ளம் வெண்மை யாம்!பெயர்-
ஆண்டாளாம்! காமுகன் கண்ணனை வாழ்நாளில்-
தீண்டாது காதலித் தாளாம்! புனிதமோஅது?
வானே! என்ஆணே! தென்மதுரை மகிழ்தமிழே!
நானேஎன என்னை மட்டுமேநீ தலித்காதலா!
பேணும் காதலால்; பூத்திட்டேன்! கனவுகளில்...
வீணாக லாமோ? காலம் தாண்டாது தீண்டு!
Click & view: : சமூக நீதிக்கு அனிதா உயிர்... சுவாசம் தந்தாள்!
Comments
Post a Comment