புதர்கள்ளி சாதி நச்சுக்கொடி பூத்திட்ட மினுப்பால்...
புதர்கள்ளி நச்சுக்கொடி பூத்திட்ட மினுப்பால்(பேத)
மதப்பால் , அருந்தும்... மாட்டுப்பால் ஆமோ ?
நிதம்அம்பேத் கார்பெரியார் படிப்பகத்துள் நுழைந்து!
எதுநஞ்சற்ற சூலாம் என்றுஆய் ; தேர்வாய்சிறந்து !
துர்மத மலத்துள்ளே தோன்றிட்ட மிருதி கொசுக்க ளாலே ;
வர்ணசாக் கடைப்பு ழுக்கள் வாழும்சாதி ஈக்களாலே ;
சாதிமோதல் காலராக்கள் சமயசண்டை சீத பேதி
வீதி வீதி வேற்றுமை மலேரி யாக்கள் தோன்றிற்றே !


















ஈரோட்டு பகுத்தறிவுச் சிங்கம் பெரியார் ... எரித்திட்டது இரமன் கடவுள் என்பதாய் கற்பனை செய்திட்ட கம்பனின் மாசுறையை ! இராமயணத்தை அல்ல ; அது ஏன்? கதை !
உடைத்திட்டது முதலாம் அன்னியனின் மானுட பேத ஓதல்களை ! பிதற்றிட்ட களிமண் பொம்மை களை அல்ல ; அதனால் , களிமண்ணாகவும் _கடவுள் இல்லவே இல்லை !
ஆயினும் சுரண்டல் சிந்தனையாளர்களை ஏன் சோகம் சுரண்டிட்டதாம்? அவாளின் பக்தியிலே சில பருப்புகள் ... கூடுவிட்டு கூடு மாறிட்டதாம்? ஏன் பருப்பு உறுப்பு மாறிட்டதாம்? உப்புவிலை...
பிள்ளையாரின் சக்தியை மீறி ஏறிட்டதாம்! அதற்கு பெரியார் என்ன செய்வாராம்? இவர் தப்புச் செய்திட்டாராம் !
என்ன தப்புச் செய்தாராம்? கம்பனின் உளரல்படி ... குரங்குகட்கு ஆண்மை இல்லை என்றாராம்!
போர்ஆன ஆதி கசாயங்கள்படிக்கு (கடவுள்கட்கு) மான உணர்வு ... ஏக அலை அவனைப் போல் ,
கம்சனைப்போல் இராவணன் போல் , _ _
இரண்யண் போல் , துரியோதனன் போல் ,
கர்ணனைப் போல் ... இல்லை என்றாராம்; கற்போடு சில கடவுளச்சிகளை ... காணவில்லை என்றாராம்!
புராணப் புளுகுகளில் உள்ளவற்றைத்தானே எடுத்துரைத்தார்; இவை எப்படி தப்பு ஆயிற்றாம்?
குரங்குகளாய் இருந்திட்டவன் மனிதன் ஆகிவிட்டானாம் !
மானுடத்துள் பெரும்பாலேர்க்கு
அறிவியல் அடிப்படையில் பகுத்தறிவு சுரந்துற்றதாம்! அவர்கட்கு பகுத்தறிவு வந்துற்றதால் இவர்கட்கு என்னவாம்?
உழைப்பவன் உழைப்பை... தான் சுரண்டும் வஞ்சக அறிவை ,
(தன்)தந்திரமாக்கி ; அந்தப்படிக்கு , menதிறத்தை மண்( மண் ) திறமாக்கி; என் ( முன்னோர் ) திறத்தை எந்திரமாக்கி] இவர்கள் கற்களுக்கு முன் நின்று மணியடித்து பிழைத்திடும் சுரண்டல் பிழைப்பில் மண் விழுந்துற்றதாம்!
அன்று ஈரோட்டு பகுத்தறிவுப் பகலவன் எதிர்த்திட்டது ஏமாளிகளை அல்ல; கோணல் மூளைக் கோமாளிகளை !
கண்டித்திட்டது கோமாளிகளை அல்ல; மூளையே இல்லாத ஏமாளிகளை!
இதில் சில... பெருங்காய டப்பாக்கள் முணுமுணுத் திட்டன! எதனாலாம்?
தேர் இழுத்திட்டபல மட அய்யன்கட்கு தேள் கொட்டிற் றாம்! ஈரோடு பெருமையுற்றதாம்! ஏனாம் ?
அதில் வெங்காயங்கள் புகழுற்றனவாம்! ஊழையிடும் சாதி ஓநாய்கள் இன்று ... தெளிவுப்படுத்திக் கொள்ள விலலை ! அம்பேத்காரின் (அ)சுரசிம்மங்கள ... பெரியாரின் கருஞ்சிறுத்தைகள்! உலக நன்மைக்காக
(அவாள்லோக சேமத்துக்காகவும் ) ஓய்வாய் உலாவுகின்றன என்று!

Comments
Post a Comment