எதற்கு உன்னை இந்து என்கின்றாய்?
வரலாற்றில் இன்று !
ஈரோட்டில் 1954 ஜனவரி 23, 24 தேதிகளில் புத்தர் கொள்கை பிரச்சார மாநாடு – குலக்கல்வி எதிர்ப்பு மாநாட்டை பெரியார் நடத்தினார்.
அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.ஜி.மணவாள ராமானுஜம் தலைமையில் நடந்த அந்த மாநாட்டில் "மூன்று மாதத்திற்குள் புதிய கல்வித் திட்டத்தை ராஜாஜி அரசு திரும்பப்பெற வேண்டும்" என்ற கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அன்று தந்தை பெரியாரால் விரட்டப்பட்ட குலக்கல்வித் திட்டம் தான் இன்று
புதிய பெயரில் "புதிய கல்விக் கொள்கை" என்றும் "விஸ்வகர்மா யோஜனா" என்கின்ற பெயரிலும் ஒன்றிய பாஜக அரசு மக்கள் மீது திணிக்கிறது.
படிக்காதே - உன்னுடைய அப்பன் செய்த ஜாதி தொழிலை, உன் ஜாதிக்கு விதிக்கப்பட்ட தொழிலை நீ செய்.
அதற்கு இந்த அரசு உதவி செய்யும் என்று அறிவித்திருப்பது சனாதன தர்மப்படி அவருக்கு விதிக்கப்பட்ட வருண - ஜாதித் தொழிலை செய்ய வைக்க வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் பாஜகவின் திட்டம்..
யாரடா? உன்னைஇந்து; என்றான்! எதற்குசூத்ர?
ஈறாடா மானம்? இகழ்ஊர்... வசியாம்தாய்!
நாறா தடாசாதி நாயே! தமிழரை...
கூறாதடா இந்துஎன... கோயில்(உள்) சிலைகல்லே!
ஆத்திரம் கொண்டாயோ? ஆண்டுஆயிரம் ஆகியும்
கோத்திரம் ஆய்கின்ற கொள்ளைபுரி சோதிடன்
சாத்திர ஓதுகையில் சத்தியம்! இல்லைநீயார்?
சூத்திரனாம்... பொய்பதரை தூற்று!
செய்திஅறி விந்தணுக்கள் சித்து சரித்திரத்தில்...
ஏது நலவெண்ணை! இன்ப விளக்கெண்ணை!
சாதிதெளித் திட்டதோ? தக்காளி வித்துஉன்னை!
Comments
Post a Comment